மேலும்

Archives

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.

கோல் ஊன்றிப் பாய்தலில் யாழ். மாணவன் புதிய சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த சிறிலங்கா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர்.

சிறிலங்காவுக்கு 2623 கோடி ரூபா இராணுவ உதவி, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் – சீனா இணக்கம்

சிறிலங்காவுக்கு சுமார் 2623 கோடி ரூபா (120 மில்லியன் யுவான்) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவும், ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சிறிலங்காவின் அடுத்த மனித உரிமைகள் சவால்

சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பாரியளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்பதால் இதனைத் தடுப்பதற்கு சிறிலங்காவைச் சேர்ந்த செயற்பாட்டார்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

சீன- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த இருநாடுகளின் தலைவர்களும் உறுதி

அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை  மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, சிறிலங்கா தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிரிக்ஸ், பிம்ஸ்ரெக் மாநாடுகளில் சிறிலங்கா அதிபர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

சிறிலங்காவிடம் அவசர உதவி கோரிய அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து, சிறிலங்கா கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோவா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.