வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்
போராட்டம் ’ஜல்லிக்கட்டில் ‘ தொடங்கியது.மாடுபிடி விளையாட்டில் தொடங்கினாலும், அது வாடிவாசலிலிருந்து வெளியேறி ‘நெட்டோட்டமாய்’ ஓடிக்கொண்டிருக்கிறது. வாடிவாசல் திடலுக்குள் அதன் எல்லைகள் இல்லை: பண்பாட்டு மீட்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு,வாழ்வியல் மீட்பு போன்ற பல பரிமாணங்களுடையதாய் போராட்ட எல்லைகள் விரிவுபட்டுள்ளன.










