மேலும்

Tag Archives: லெப். கேணல்

அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தை ஆய்வு செய்ய வந்தது ஐ.நா நிபுணர் குழு

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக மாலிக்கு அனுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை மதிப்பீடு செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும், ஐ.நா குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இராணுவ ஆலோசகராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ் நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா படைகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்பது தொடர்பான நிதி மற்றும் நிபுணத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ள பிரித்தானியா, அது தொடர்பாக ஆராய, பிரித்தானிய படை அதிகாரிகள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் சிக்கினார்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அதிபர் ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் உயர்மட்ட படை அதிகாரிகள் 32 பேர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

4 இராணுவ அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று அனுமதி அளித்துள்ளது.

பிரகீத் கடத்தல்: 2 லெப்.கேணல்களை கைதுசெய்ய சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.