ஜெனிவாவில் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டன- திலித் ஜயவீர குற்றச்சாட்டு
ஜெனிவாவில் சிறிலங்காவின் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம்சாட்டியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
” ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான சிறிலங்கா பிரதிநிதிகள் குழு வெளியுறவுக் கொள்கையை பேரழிவு தரும் வகையில் நிறைவேற்றியதையிட்டு திகைத்துப் போனேன்.
சிறிலங்கா அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியகடமைப்பட்ட 22 மில்லியன் குடிமக்களுக்கும், சிறிலங்காவிற்கு எதிரான ஆதாரமற்ற ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிராகப் பேசி, எங்களுடன் நின்ற எங்கள் நட்பு நாடுகளின் அதிர்ச்சியூட்டும் துரோகத்திற்கும் உடனடியாக பதில்களை வழங்க வேண்டும்.
பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் அனைத்துலக சமூகத்தின் முன் முற்றிலும் பலவீனத்தையும் திறமையின்மையையும் வெளிப்படுத்தியது.
இது அரசாங்கம் நாட்டின் முன்னுரிமைகளை எவ்வளவு மோசமாகக் கையாளுகிறது என்பதை பிரதிபலிக்கிறது.
இந்த நடவடிக்கையை சிறிலங்காவின் உள்ளடக்கிய தேசியவாதக் கண்ணோட்டத்தை முற்றிலுமாக கைவிடுதலாகும், அத்தகைய நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன” என்றும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.