ஜெனிவா தீர்மானம் – இன்று சிறப்பு அறிக்கை வெளியிடுகிறார் விஜித ஹேரத்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.
ஜெனிவா தீர்மானம் மற்றும், அந்த அமர்வில் வெளிப்படுத்தப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, வெளிவிவகார அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என அறிவி்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 60/L.1/Rev.1 என்ற இந்த தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்தது.
எனினும், இந்த தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராதமை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகி்ன்றன.