அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடத் தடை
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது, உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தேர்தல் முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.