மார்ச் 2ம் நாள் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.
சிறிலங்காவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரம் குறித்து, வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான பாரிய இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இறங்கியுள்ளது.
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான திலிப் சின்ஹா, ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது இடத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பருதீன் நியமிக்கப்படலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.