ரணிலைப் பதவி நீக்க 113 வாக்குகள் தேவையா?
நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மூன்று விதமான நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர், அதனைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்பதை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள பெரும் வெற்றியை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஐதேக இறங்கியு்ள்ளது.
புதிய பிரதமர் தலைமையிலான மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு முடிவு செய்துள்ளது.