மேலும்

Tag Archives: சிறிலங்கா சுதந்திரக் கட்சி

இரத்தினபுரி மகிந்த ஆதரவுப் பேரணியில் தடையை மீறுவராம் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் இன்று இரத்தினபுரியில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளன.

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவேன் – மகிந்த ராஜபக்ச

தாம் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பலரின் அதிகாரங்களைக் குறைத்த சிறிலங்காவின் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று புதிய அமைச்சர்களுக்கு நியமனங்களை வழங்கிய போது, ஏற்கனவே அமைச்கர்களாக இருந்தவர்களிடம் இருந்து சில பொறுப்புகளை மீள எடுத்துக் கொண்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை மீறினார் ஜனாதிபதி மைத்திரி

தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கத்துக்குள் உள்வாங்கியுள்ளதை அடுத்து, சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உதயமாகிறது தேசிய அரசாங்கம் – 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா தொழிற்கட்சியின் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மகிந்த முடிவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்காக, சிறிலங்கா தொழிற்கட்சி மூலம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் கைப்பற்றினார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் – தேர்தல் பிற்போடப்படலாம்?

இந்த ஆண்டு நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல், ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றங்கள் – தூக்கி வீசப்பட்டார் கருணா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தோல்விக்குப் பின் மீண்டும் அரசியல் மேடையில் ஏறுகிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், முதல் முறையாக பொதுமக்கள் முன்பாக அரசியல் மேடை ஒன்றில் தோன்றவுள்ளார்.