மேலும்

Tag Archives: குருநாகல

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரும் பிணையில் விடுதலை

அளவ்வவில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் சரத் மகோற்றியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அட்மிரல் உலுகத்தென்னவுக்கு பிணை – சிஐடி பணிப்பாளருக்கு நீதிபதி கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், கியூபாவுக்கான முன்னாள் தூதுவருமான அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை பிணையில் விடுவித்துள்ள குருநாகல மேல்நீதிமன்றம், இந்த கைது விடயத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளும் படங்களும்

வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் பெருமளவு வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன.

குருநாகலவில் மீண்டும் களமிறங்குகிறார் மகிந்த

வரும் ஜனவரி 05ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்

சதொச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக நடக்கும் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை விளக்கமறியலில் வைக்க குருநாகல மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 ஆயிரம் ஏக்கர் பயிர்களை நாசம் செய்த சூறைக்காற்று – நாளை வரை தொடருமாம்

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று 70 கி.மீற்றருக்கும் அதிக வேகத்துடன் வீசிய சூறைக் காற்றினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – இறக்குமதிக்குத் தயாராகிறது சிறிலங்கா அரசு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 40 வீதம் அறுவடை குறையும் என்று ஐ.நா உணவு விவசாய நிறுவனம் மற்றும் ஐ.நா உணவுத்திட்டம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிறிலங்காவில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப்போரில் பங்கெடுத்த தளபதிகளை கைவிடுகிறது அரசு – மகிந்த குற்றச்சாட்டு

இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய  மூத்த இராணுவ அதிகாரிகள்  பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

விவாதத்தில் இருந்து நழுவினார் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த, ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்தில், உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார்.

அனுர யாப்பா, சுசில் பிரேமஜெயந்தவை சுதந்திரக் கட்சியை விட்டே நீக்கினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பாவும், சுசில் பிரேமஜெயந்தவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.