மேலும்

Tag Archives: குருநாகல

மகிந்தவை பிரதமராக நியமிக்காவிடின் செங்கோலைக் கைப்பற்றுவோம் – எச்சரிக்கிறது மகிந்த அணி

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்கா விட்டால், செங்கோலைத் தூக்கிக் கொண்டு, தாம் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்க.

மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு கோத்தாவிடம் ஒப்படைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல மாவட்டத்தில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவது ஏன்? – சிவாஜிலிங்கம் பதில்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவே, அவர் போட்டியிடும் குருநாகல மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச வேட்புமனுவைக் கையளிக்க வரவில்லை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுவைக் கையளிக்க குருநாகல மாவட்டச் செயலகத்துக்கு வரவில்லை.

மகிந்தவின் தேசியப்பட்டியல் பரிந்துரை – மைத்திரியின் அனுமதிக்காக காத்திருப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் உள்ளடக்குவதற்கு, மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அட்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்டோரின் பட்டியலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகல மாவட்டத்தில் சரத் பொன்சேகா போட்டி? – மகிந்தவுடன் மல்லுக்கட்டப் போகிறார்

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில், சரத் பொன்சேகாவை அங்கு களமிறக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்த மாவட்டத்தில் மகிந்த போட்டி? – இன்னமும் உறுதியற்ற நிலை

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு நாளை வேட்பு மனுவில் கையெழுத்திடுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ள போதிலும், இன்னமும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறார் மகிந்த?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பகா மாவட்டத்தில் போட்டியிடுவார் மகிந்த?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கம்பகா மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல மாவட்டத்தில் 98 வீத அஞ்சல் வாக்களிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பில், குருநாகல மாவட்டத்தில் அதிகபட்சமாக, 98 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிதிசேகர தெரிவித்துள்ளார்.