மேலும்

Tag Archives: காற்றாலை

மன்னாரை அதிர வைத்த கண்டனப் போராட்டம்- ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், பொதுமக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் மன்னாரில் நேற்று பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் பொதுமக்களை தாக்கிய காவல்துறையினர் மீது விசாரணை நடத்தப்படாது

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் நடத்திய பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக விசாரணை ஏதும் நடத்தப்படாது என, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வினீத் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சிறிலங்கா காவல்துறை அட்டூழியம்- பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்

மன்னாரில் காற்றாலைகளுக்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்வதற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, சிறிலங்கா காவல்துறையினர்  கொடூரமான  முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மன்னாரின் கனிய மணல் அகழ்வு – மக்களைச் சூழவுள்ள பேராபத்து

மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில்  மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

முள்ளிக்குளத்தில் காற்றாலைகளுக்கு 7 நிறுவனங்கள் விண்ணப்பம்

மன்னார்-  முள்ளிக்குளத்தில் இரண்டு,  50 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு, 7 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக  மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு

சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்

பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி  கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின்  சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் மன்னாரில் காற்றாலை மின் திட்டம்

மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை அமைக்கவும், 3400 கி.மீ நீளமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும், ஆசிய அபிவிருத்தி வங்கி, 350 மில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளது.

பூநகரியில் 6000 ஹெக்ரெயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்

பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.