44 நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா போர்க்கப்பல்
பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.
பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், திடீரென மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள் ஆங்கில இதழ் வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ளன.
முன்னைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, மைத்திரி- மகிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஐ.நா மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும் கவலையடைந்துள்ளது என்றும், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும், சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.
ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். என்று, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.