மேலும்

Tag Archives: ஐ.நா மனித உரிமைகள் பேரவை

ஐ.நா உதவியுடன் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை – இன்று கொழும்பில் முக்கிய ஆலோசனை

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

ஜெனிவாவில் நிறுத்தவே கே.பியை வைத்திருக்கிறதாம் சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் 25 இல் சமர்ப்பிக்கப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா குறித்த விசாரணைகளின் அறிக்கை வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா அறிக்கை கிலியில் சிறிலங்கா – இப்போதே சட்டவல்லுனர்களைத் தயார்படுத்துகிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையை எதிர்கொள்வது குறித்து உலகிலுள்ள மிகப் பிரபலமான சட்டவல்லுனர்களுடன் சிறிலங்கா தொடர்பு கொண்டுள்ளது.

போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவைப் பாதுகாக்கும் மைத்திரி – கருத்துக்கூற மறுக்கிறது கூட்டமைப்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது.

சரியான பாதையிலேயே செல்கிறதாம் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திலிப் சின்காவின் பதவிக்காலம் முடிகிறது – சிறிலங்காவைக் காப்பாற்ற வரப்போகும் புதியவர் யார்?

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நீர்த்துப் போகும் வகையில் திருத்தங்களைச் செய்வதில் முக்கிய பங்காற்றிய, இந்திய இராஜதந்திரியான திலிப் சின்காவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

பயணத்தடையை நீக்க கூட்டமைப்பும் வடமாகாணசபையும் முயற்சிக்கவில்லை – யாழ்.ஆயர் குற்றச்சாட்டு

வடபகுதிக்கு வெளிநாட்டவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ். ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.