அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
