மே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.
மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கான அமைச்சுக்கள், பொறுப்புகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தில் தற்போது, இராஜாங்க அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ பதவியில் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது என்று சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் இன்று அதிகாலை நாடு திரும்பியதும், அடுத்து வரும் வாரங்களில், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட இறுக்கமான பல அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.