மேலும்

522 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு 866.71 மில்லியன் ரூபா

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 522 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இந்தக் காணிகளில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் தளங்களை அகற்றி மாற்று இடங்களில் அமைப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கம் 866.71 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் , புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் , வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து, சிறிலங்கா படையினருக்கு நிதி ஒதுங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

அதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, சிறிலங்கா இராணுவம், விரைவில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *