மேலும்

Tag Archives: அனைத்துலக விசாரணை

அனைத்துலக நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது – சுமந்திரனுக்கு சமரசிங்க பதிலடி

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை கொண்டு செல்ல முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தற்போதைய அரசாங்கம்  நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

எந்த விசாரணைக்கும் அஞ்சவில்லை – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

போரின் போது சிறிலங்கா படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அனைத்துலக விசாரணையில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றினோம் – மங்கள சமரவீர

அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை சிறிலங்கா இராணுவத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதா?

ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நீதிப் பொறிமுறையானது, நடுநிலைமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றைப் பின்பற்றும் தனிப்பட்ட நீதியாளர்களின் தலைமையில் சுயாதீன நீதி சார் மற்றும் விசாரணை சார் நிறுவகங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை – சுமந்திரன்

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட விடயங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்கிறார் சம்பிக்க ரணவக்க

கலப்பு நீதிமன்ற முறைமையில் எவ்வாறான அனைத்துலக உதவிகளை பெறுவது என்பதை சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும், இதில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

உடனடியாகத் தொடங்காதாம் போர்க்குற்ற விசாரணை – காலஅவகாசம் கேட்கிறது சிறிலங்கா

போர்க்குற்ற விசாரணையை, உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும், இதனை ஆரம்பிக்க ஒரு ஆண்டு காலஅவகாசமேனும் தேவை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்துலக விசாரணை, கலப்பு நீதிமன்ற யோசனை நீக்கப்பட்டது சிறிலங்காவின் பெரும் வெற்றியாம்

ஐ. நா. மனித உரிமை பேரவையில்  அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அனைத்துலக  விசாரணை என்ற அழுத்தமும் கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை  சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அனைத்துலக விசாரணையே நியாயம் தரும் – 170 கத்தோலிக்க குருமார் ஐ.நாவுக்கு கடிதம்

அனைத்துலக விசாரணை மட்டுமே, சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என்று, வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க குருமார்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.