இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.
விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்காக, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், பறிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்தில் எந்த தவறும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை, தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக கொழும்புக்கு வருமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினால், சிறிலங்கா அரசியலில் இன்று கொந்தளிப்பான நிலை தோன்றியிருக்கிறது.
சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.