மேலும்

Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

இந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை.

முதல்வர் விக்னேஸ்வரன் மீது ரணில் சீற்றம்

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக, வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா உயர் பிரதிநிதி ரணிலுடன் சந்திப்பு – விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்

சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

‘இரகசியத் தடுப்பு முகாம்கள் இல்லை’ – மகிந்த பாணியில் கைவிரித்தார் ரணில்

சிறிலங்காவில் இரகசியத் தடுப்பு முகாம்கள் எவையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ருக்மலி சிறி தர்மலோக  விஜயலோக மகாவிகாரையில், பௌத்த பிக்குகளுடன் நடத்திய உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த அரசின் ஊழல்களை விசாரிக்க அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியாவிடம் உதவி

முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகிறார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வரும் 6ம் நாள்- வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு, இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அச்சு ஊடகங்களுக்கு ரணில் கடும் எச்சரிக்கை

சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டு,  இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டிருந்த அவுஸ்ரேலிய அரசு மீது ரணில் கடும் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட் கொண்டிருந்த நெருக்கமான உறவு, இலங்கையர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.