பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் முக்கியம் – ஐ.நா குழு
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு கோரியுள்ளது.
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு கோரியுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பில், நல்லிணக்க விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
சிறிலங்கா, உள்ளிட்ட பூகோள மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஜெனிவாவில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.