மேலும்

இன்று சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் – தமிழிலும் தேசியகீதம் பாட ஏற்பாடு

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வு இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி வாய்ப்பு – கடற்படையினரிடம் மைத்திரி உறுதி

உலகின் முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையில், முப்படையினருக்கும் மேலதிக பயிற்சிகளை அனைத்துலக  மட்டத்தில், பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை தமது அரசாங்கம் கண்டறியும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சொத்துகள் வாங்கிக் குவித்தது குறித்து பசில் ராஜபக்சவிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர், ஆறு மணி நேரமாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் செய்தியிலும் மகன் கைது குறித்து புலம்பியுள்ள மகிந்த

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கூட, தனது மகன் கைது செய்யப்பட்டுள்ளது மற்றும் தனது குடும்பத்தினர் பழிவாங்கப்படுவது குறித்தே முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பதாவது இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே அவர் கொழும்பு வரவுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன், கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. 

பதவி விலகுகிறார் வடக்கு மாகாண ஆளுனர் – புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே?

வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார  இந்த மாத இறுதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

நாளை நடக்கவுள்ள சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க வரவில்லையாம் ஹுசேன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.