புதன்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 79வது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 79வது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.
அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்காவுடன், ஒத்துழைக்க ரஷ்யா தயாராகவே இருப்பதாக சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர், லெவன் சகார்யான் ( Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, பாதாள உலக குழுவினருக்கு ஆயுதங்களை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாகவே, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொஹோற்றி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கேக் வெட்டி கொண்டாடியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவர் குறித்து, ஆராய்ந்து வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொகோற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் சீனாவுக்குப் பயணமாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.