பந்து சிறிலங்காவின் கையில் என்கிறார் ரஷ்ய தூதுவர்
அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்காவுடன், ஒத்துழைக்க ரஷ்யா தயாராகவே இருப்பதாக சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர், லெவன் சகார்யான் ( Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது, கேள்விக்கு ஒன்றுக்குப் பதிலளினத்த அவர்,
அது நாட்டின் இறைமையுடன் தொடர்புடையது என்பதால் ரஷ்யா இந்த விடயத்தில் எதையும் திணிக்காது
அணு மின் நிலையம் அமைப்பதற்கான திட்டம் குறித்து, கலந்துரையாட சிறிலங்கா எரிசக்தி அமைச்சருடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.
நான் எப்போதும் சொல்வது போல, பந்து உங்கள் கையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து கருத்து வெளியிட்ட ரஷ்ய தூதுவர், மேற்கத்திய சக்திகளின் அழுத்தம் இருந்த போதிலும் சிறிலங்காவின் நடுநிலை நிலைப்பாட்டை பாராட்டுவதாக குறிப்பிட்டதுடன், இந்தப் போரில் எந்த சக்தியும் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.