திருக்கோணமலைத் துறைமுகத்தில் 4 இந்தியக் கடற்படைக் கப்பல்கள்
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.
சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மேற்குலக சக்திகள் மற்றும், இந்தியாவுடனான உறவுகளில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சீனாவை சிறிலங்கா இழக்காது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
தன்னைத் தோற்கடித்த வடக்கு, கிழக்கு மக்களைப் பிரிவினைவாதிகள் என்று அறிமுகப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடும் வகையில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் விசாரணைகளில் சிக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை, ஏற்படுத்துமாறும், அதனைத் தொடர்ச்சியாகப் பேணும் உறுதியான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்குமாறும், சிறிலங்கா அதிபரிடம், சீனப் பிரதமர் லி கெகியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று, சீன அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, சீன அமைச்சரை மேற்கொள்காட்டி வெளியான செய்திகளை சிறிலங்கா நிராகரித்துள்ளது.
சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக, பிரித்தானிய, அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றியதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் நிராகரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் ஆளும்தரப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.
சிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.
சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்களின் சட்டரீதியான நலன்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக, சீனாவின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.