மேலும்

ஜப்பானில் மங்கள சமரவீர – பொருளாதார உதவிகளை குறிவைக்கிறார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜப்பானுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியூமியோ கிஷிடா மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஜூன் 30இற்குப் பின்னர் நாடாளுமன்றம் வருகிறது 20ஆவது திருத்தச்சட்டம்

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 30ஆம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரமாக கூடுகிறது ஐதேக செயற்குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒபாமாவின் கொழும்பு பயணம் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியாதாம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளது.

மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டமாகத் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வித்தியா வழக்கிற்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையா? – கேள்வி எழுப்புகிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவது தொடர்பாக,  தமிழர் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

விசாரணைப் பொறிமுறை குறித்து உயர்மட்டத்தில் உள்ளக கலந்துரையாடல்

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நம்பகமான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்தின் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

20ஆவது திருத்தம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம் – 23 ஆயிரம் கோடி ரூபா செலவாகும்

இந்தியாவையும் சிறிலங்காவையும் தரைவழிப் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருப்பதாக இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.