மேலும்

ஒபாமாவின் சிறிலங்கா வருகை குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரியாதாம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 59 முகாம்களை மூடவில்லை – சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுப்பு

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நிராகரித்துள்ளது.

உள்நாட்டு விசாரணை நம்பகமானதாக இருக்கும் – என்கிறார் விஜேதாச ராஜபக்ச

இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கும் உள்நாட்டுப் பொறிமுறை, அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் நம்பகம்மிக்க ஒன்றாக இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிதியமைச்சரின் தலை தப்புமா? – ஜூலை 6இல் தெரியும்

சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் ஜூலை 6 ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மைத்திரி – மகிந்த இடையே இணக்கத்தை ஏற்படுத்த சுதந்திரக் கட்சியில் ஆறு பேர் கொண்ட குழு அமைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப நிறுவகத்தை அமைக்க சீனா உதவி

சிறிலங்காவுக்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில் உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் கொழும்பு வருகிறார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல்- அமெரிக்கா விசாரணை

ஒரு மில்லியன் பரல் மசகு எண்ணெயுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அமெரிக்கா விசாரணைகளை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் தப்பியவரே சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும் – ஜெனிவாவில் அமெரிக்கா

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.