மேலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 23 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆறு புதுமுகங்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் 16 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இம்முறை, ஆறு புதுமுகங்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகலவில் மகிந்தவுக்கு அதிக விருப்பு வாக்குகள்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, 423,529 விருப்பு வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

தேசியப்பட்டியலிலும் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசியப் பட்டியல் மூலம் நிரப்பப்படும், 29 ஆசனங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றின் மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்தது கூட்டமைப்பு

சிறிலங்காவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களைக் கைப்பற்றி, மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தைக் கைப்பற்றியது கூட்டமைப்பு – 3 ஆசனங்களில் வெற்றி

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருகோணமலையில் இரா.சம்பந்தன் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நாமல், சஜித்துக்கு அதிக விருப்பு வாக்குகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாமல் ராஜபக்சவும், ஐதேக சார்பில் சஜித் பிரேமதாசவும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மாவை, சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன், சரா வெற்றி – சுரேஸ் தோல்வி

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

வெளியான முடிவுகளில் பிரதான கட்சிகளுக்கிடையே இழுபறி நிலை

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஐதேக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும், முக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கூடுதலான ஆசனங்களுடன் இன்னமும் முன்னிலை வகிக்கிறது.