மேலும்

இன்று சிறிலங்கா வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும், 25ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி கொழும்பு வருகை

போர்க்குற்ற விசாரணைக்கு உதவுவதற்காக ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி வந்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போரின் கடைசி 12 மணித்தியாலங்களில் புலிகளாலேயே அதிக பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்

போரின் கடைசி 12மணி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களுக்கு, விடுதலைப் புலிகளே காரணம் என்று, மக்ஸ்வெல் பரணகம  ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் – பரணகம ஆணைக்குழு

சிறிலங்காவில் போரின் போது, போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ள  மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு, எந்தவொரு போர்க்குற்ற விசாரணையும் அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையே – பரணகம ஆணைக்குழு அறிக்கை

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையானதே என்று கூறியுள்ள, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை, இதுதொடர்பாக மூத்த இராணுவத் தளபதிகள் குற்றவியல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

விதைக்கப்பட்டது தமிழினியின் வித்துடல்

புற்றுநோயால் சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) யின் வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.

இடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி அவர்களின் எண்ணமெல்லாம் தமிழ்மக்களின்  விடுதலைபற்றியும் தமிழ்ப்பெண்களின் உயர்ச்சிபற்றியதாகவுமே இருந்திருக்கின்றன.  அவரது எண்ணங்கள் ஈடேற இதய  சுத்தியோடு நாம் அனைவரும் உழைக்கவேண்டும்.

பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறது செஞ்சிலுவை சங்கம்

இந்தியாவின் வீடமைப்பு திட்ட உதவி நிதியைப் பெறுவதற்கு, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரி பாலியல் இலஞ்சம் கோரியதாக, முழங்காவில் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று சிறிலங்கா செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் – நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் ரணில்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

மன்னம்பிட்டி முகாமில் கொல்லப்பட்டு திருமலை கடலில் வீசப்பட்டார் பிரகீத் – விசாரணையில் தகவல்

கடத்தப்பட்டு காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு, கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்று, இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.