கிவுல் ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை, குறைந்த விவசாய உற்பத்தித்திறன் மற்றும் வறுமையை ஒழிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தத் திட்டம், உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி, 2026 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2031 ஆண்டுக்கு இடையில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு, 23,456 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னர் திட்டமிடப்பட்டதை விட, 4,170 மில்லியன் ரூபா அதிகமாகும்.
இந்த திட்டத்தின் மூலம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
