மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

திருகோணமலை எரிசக்தி கேந்திரம், எண்ணெய் குழாய் இணைப்பு குறித்து பேச்சு

திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் மற்றும் இந்தியா-சிறிலங்கா இடையிலான எண்ணெய் குழாய் திட்டம் ஆகியன குறித்து, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சிறிலங்கா  பயணத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேசியது என்ன?- இந்திய தரப்பின் விளக்கம்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பிற்பகல் கொழும்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு விரைவில் அனைத்துலக அங்கீகாரம்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு (Colombo Security Conclave) விரைவில் அனைத்துலக அமைப்பு என்ற அங்கீகாரம் வழங்கப்படும் என்றும்,  இந்தியர் ஒருவர் அதன் முதலாவது பொதுச்செயலராகப் பணியாற்றுவார் என்றும், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி  தெரிவித்துள்ளார்.

சீனாவை எதிர்கொள்ள சிறிலங்காவில் கடல்சார் இருப்பை அதிகரிக்கும் இந்தியா

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தனது பொருளாதார இருப்பை வலுப்படுத்தவும், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும், இந்தியா தொடர்ச்சியான மூலோபாய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம், சிறிலங்காவில் தனது கடல்சார் இருப்பை அதிகரித்து வருகிறது.

ஹெய்டிக்கான கும்பல் ஒடுக்கும் படையில் இணைவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

ஹெய்ட்டியில் ஐ.நா ஆதரவுடன் நடைபெறும், சர்வதேசப் பணிக்கு பங்களிப்பது குறித்த சாத்தியங்களை அரசாங்கம் தற்போது மதிப்பீடு செய்து வருவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய துணை குடியரசு தலைவர் முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார்

சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் 15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு முடிவுகள்

2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, சிறிலங்காவின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரபூர்வ முடிவுகளை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தனிப்பட்ட சம்பவம் அல்ல – 2017இல் தொடங்கிய சதியின் விளைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், 2017 ஆம் ஆண்டில் தொடங்கிய ஒரு சதியின் விளைவு என்றும்  விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கப்பல்கள் மீதான தடை- சீனத் தூதுவர் கவலைப்படாதது ஏன்?

2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் மீண்டும் சிறிலங்கா இராணுவம்

சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர்  ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா படைகள் அனுப்பப்படவுள்ளதாக  மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.