சமூக கட்டமைப்பின் சீர்குலைவே யாழ்.வன்முறைகளுக்கு மூலகாரணம் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்
புங்குடுதீவில் மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும், போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பாரம்பரிய சமூக நிர்வாக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முறிவே காரணம் என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.