நோர்வே ‘தமிழ்3’ வானொலி நடாத்தும் நாடக எழுத்துருப் போட்டி
நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, வானொலி நாடக எழுத்துருவிற்குரிய போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, வானொலி நாடக எழுத்துருவிற்குரிய போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் போலல்லாது சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது நாட்டில் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மிகத் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
வழமையை விட இரண்டு ஆண்டுகள் முன்னதாக அதிபர் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும் இதனை ஜனவரி 08 அன்று நடாத்தவுள்ளதாகவும் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த போது இவர் தான் வெற்றி பெறுவேன் என்கின்ற நம்பிக்கையைக் கொண்டிருந்திருப்பார்.
சமுத்திரா தேவியின் இயந்திரம் மற்றும் சேதமடைந்த இதன் பெட்டிகள் போன்றன 2008ல் மீளவும் பொருத்தப்பட்டன. பத்தாண்டுக்கு முன்னர் சமுத்திரா தேவி பயணித்த அதே நேரம் வெள்ளியன்று ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்களை ஏற்றிக் கொண்ட தெற்கிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது.
நில அபகரிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல், முன்னாள் போராளிகளுக்கெதிரான வன்முறை, சட்டத்திற்கு முரணான கைதுகள், என்று பல்வேறு வழிகளில் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். எனவே பதவியில் இருக்கும் அதிபருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பது ஒரு போதும் ஒரு தெரிவாக இருக்க முடியாது.
“இறுதிக்கட்ட யுத்தமானது தமிழ் மக்களுக்கான சுதந்திர தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான அழுத்தத்தை வழங்கியது. சிறிலங்கா இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போன்றன தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது”.
ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து அபிலாஸ் மயிரிழையில் உயிர்தப்பியதால் மட்டுமன்றி இவனை மீண்டும் இவனது பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு 52 நாட்கள் நீதிக்காகப் போராடியதாலேயே இன்றளவும் அபிலாசின் பெயர் உலகம்பூராவும் பிரபலம் பெற்றிருப்பதற்குக் காரணமாகும்.
சீனாவுக்கு சிறிலங்கா சிறப்புச் சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா திறந்த மனதோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.
தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
“பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் நவம்பர் 22 அன்று அமரராகினார். இவரது இழப்பானது கனடாவுக்குப் பாரியதொரு இழப்பாகும். புலமைவாதி ஒருவரை பண்பாளன் ஒருவரை கனடா இழந்துவிட்டது. பேராசிரியர் அவர்கள் இவரது சக புலமைவாதிகளாலும் இவரது மாணவர்களாலும் நன்கு போற்றப்படுகிறார்” – நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சான்.