சிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்
சிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரை இடம்பெற்றது.
