கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பசில் ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்குச் சமூகமளித்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவின் பணயகத்துக்கு வருகை தந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்கும், தேர்தல் முறை மாற்றம் குறித்து புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, புதிய தேர்தல் முறைமையின் கீழேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர், இன்று அதிகாலையில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.