சுதந்திரமான நீதி முறைமையை கொண்டுள்ளதாம் சிறிலங்கா – மெச்சுகிறார் இராணுவப் பேச்சாளர்
மிருசுவில் படுகொலை வழக்கில் இராணுவ அதிகாரியான சுனில் இரத்நாயக்கவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை, சுதந்திரமானதும், அசாதாரணமானதுமான நீதி முறைமையைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.




