மேலும்

பிரிவு: செய்திகள்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்தவை எப்படி பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும்? – மைத்திரி கேள்வி

மோசமான – ஊழல் ஆட்சியை நடத்தியதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, எவ்வாறு எமது பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு இன்னமும் செயற்படுகிறதாம் – அமெரிக்கா கூறுகிறது

சிறிலங்கா படைகளால், 2009ஆம் ஆண்டில், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் அனைத்துலக நிதி மற்றும் ஆதரவாளர்களின் வலையமைப்பு தொடர்ந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தரைவழிப்பாதை திட்டம் சிறிலங்காவுக்குத் தெரியாதாம்

இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கும் வகையில் பாக்கு நீரிணை வழியாக நெடுஞ்சாலை மற்றும் தொடருந்துப்பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியா தம்முடன் எந்த பேச்சுக்களையும் நடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பதுக்கப்பட்ட சொத்துக்களை மீட்க அமெரிக்கா ஏன் உதவுகிறது?

சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீளத் தொடங்குவதற்கு இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் தனது எதிர்ப்பைக் காண்பித்துள்ளது. எனினும், சீனா தொடர்ந்தும் இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.

சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இந்தியத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

போலி நகைகளைக் கொடுத்து முன்னாள் போராளிகளை ஏமாற்றிய மகிந்த

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்துள்ளது.

சீனாவைச் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கை மீளாய்வு – ஜப்பானில் மங்கள சமரவீர தெரிவிப்பு

சீனாவைச் சார்ந்திருக்கும் வெளிவிவகாரக் கொள்கையை சிறிலங்கா மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.