மேலும்

பிரிவு: செய்திகள்

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி – மங்களவும் இணைந்தார்

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து  கொழும்பில்  இன்று மாலை பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.

வன்னியில் இரு வாரங்களுக்குள் மூன்று பௌத்த வழிபாட்டுத் தலங்கள் திறப்பு – தீவிரம் பெறும் ஆக்கிரமிப்பு

வன்னியில் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ள பகுதிகளில், புதிய பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

12 கொமன்வெல்த் நாடுகளில் தகைமையற்ற தூதுவர்கள் – சிறிலங்கா அரசு ஒப்புதல்

கொமன்வெல்த் நாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா தூதுவர்களில், இரண்டு பேர் மாத்திரமே, அந்தப் பதவிக்குத் தகைமையானவர்கள் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளரை ஆதரிக்க கூட்டமைப்பு விதிக்கும் 3 நிபந்தனைகள்

வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும்,  வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் தயாராக இருந்தால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

மேல் முறையீடு செய்யாவிடின் மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு – இந்தியாவுக்கு மகிந்த நிபந்தனை

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாகத் தகவல் வெளியிட்டுள்ளார், பிரதி அமைச்சர் பிரபா கணேசன்.

அகதிகளை பலவந்தமாக திருப்பி அழைக்கமாட்டோம் – முதல்வர் விக்னேஸ்வரன்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை பலவந்தமாக தாயகத்துக்கு திருப்பி அழைக்கப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்குமாறு கோத்தாவுக்கு சபாநாயகர் உத்தரவு

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

மேல்முறையீடு செய்தது இந்தியா – மீனவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை

ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிராக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் – மகிந்தவுக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும்  அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் ரணில் கோரிக்கை

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமாறு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.