மேலும்

பிரிவு: செய்திகள்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்த வேண்டும்  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

‘மகிந்தவை வைத்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல்’

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சியின் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கில் நேவி சமந்தவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கா கடற்படை கப்டன் சமந்த முனசிங்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.

யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

கட்டுப்பணம் கையேற்கிறது சிறிலங்கா தேர்தல் திணைக்களம்

சிறிலங்காவில் எதிர்வரும்  ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிருசுவில் படுகொலை வழக்கு – உள்ளக விசாரணைக்கு பின்னடைவு

மிருசுவில் படுகொலை வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த  உள்நாட்டு நீதிக் கட்டமைப்பு தவறியிருக்கிறது.  அல்லது அவர்களைத் தப்பிக்க இடமளித்திருக்கிறது. இந்தநிலையில், இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணை நியாயம் வழங்கும் என்று எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?

வேட்பாளர் பட்டியலில் மகிந்தவுக்கு இடமில்லை – மைத்திரி திட்டவட்டமாக அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடும் வீழ்ச்சி – ஐரோப்பிய ஒன்றியத் தடையின் விளைவு

சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில், 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பிரகடனத்தில் கையெழுத்திட்டது சிறிலங்கா

சீனாவின் முன்முயற்சியால் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிப் பிரகடனத்தில் சிறிலங்கா இன்று கையெழுத்திட்டுள்ளது. பீஜிங்கில் நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

உலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது சிறிலங்கா

உலக அமைதிச் சுட்டியில் சிறிலங்காவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டியில், சிறிலங்கா  114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.