மேலும்

பிரிவு: கட்டுரைகள்

சிறிலங்கா இராணுவத்துக்குள் உள்ள புற்றுநோய்

ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த சிறிலங்கா இராணுவ வீரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்ற்றியில் எவ்வாறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தொடர்பான அதிர்ச்சியான ஒரு பதிவை The Associated Press   ஊடகம்  அண்மையில் வெளியிட்டிருந்தது.

தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் இடம்பெயர்ந்த மக்கள்

சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்று  எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதுடன் தமது வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்பி வருகின்றனர்.

சிறிலங்கா இனப்படுகொலைக்கு நீதிகோரும் தமிழ்நாட்டுக் காரணி- அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக மார்ச் 2017ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆராய்வதற்கு சில நாட்களின் முன்னர், சிறிலங்கா அரசாங்கம் தனது யுத்தக் குற்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.

சிறிலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்

‘எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம்.

அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்?

சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டகாலம் காத்திருக்க முடியாது – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவானது தனது நாட்டில் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வரை,  பல ஆண்டுகளாகக் காத்திருக்கும், 100,000 வரையான காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கும் வரை நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வரமுடியாது.

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா

ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட இத்துறைமுகத்திற்கு இம்மாதத்தில், இரு வாரங்கள் வரை அமெரிக்க இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இன்னமும் தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு  

உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக அமைப்பின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்டது.