நிலைமாறும் உலகில் – மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் நோக்கிய அரசியல்
உலகில் அனைத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் பொதுவான வர்ணனைச் சொற்பதம் கொண்டு மேலை நாடுகளால் அழைக்கப்படுகிறது, அது தான் மென்மையான அரசுகள் (Fragile States ). தமது சொந்த மக்களுக்கே அடிப்படை அளவிலான சேவையையும் பாதுகாப்பையும் கொடுக்க கூடிய வலிமையற்ற அரசுகளாக அவை காணப்படுவதாலேயே இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.





