மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மூன்று வழக்குகளில் இருந்து சிராணி பண்டாரநாயக்க விடுதலை

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மற்றொரு மாநிலமாக சிறிலங்கா மாறும் – எச்சரிக்கிறார் மகிந்த

தற்போதைய நிலைமைகள் தொடர்ந்தால், இந்தியாவின் மற்றொரு மாநிலமாக சிறிலங்கா மாறும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

லசந்த கொலை சந்தேகநபர்களில் ஒருவர் கப்டன் திஸ்ஸ – ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு?

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று நேற்று சிறிலங்கா காவல்துறையால் வெளியிடப்பட்ட – வரையப்பட்ட உருவப்படங்களில் ஒன்று சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் கப்டன் திஸ்ஸவுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோசிதவைப் பிணையில் விடுவிக்கும் முயற்சி தோல்வி – ஏமாற்றத்துடன் திரும்பிய மகிந்த

சிஎஸ்என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.யோசித ராஜபக்சவை , கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணையில் விடுவிக்க மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

மகிந்த வெளியே போவதை தடுக்கமாட்டோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்று முடிவு செய்யும் சுதந்திரம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.

தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் – மகாநாயக்க தேரர்களிடம் வடக்கின் புதிய ஆளுனர்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

பரணகம ஆணைக்குழுவுக்கு மூன்று மாத சேவைநீடிப்பு

காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா செல்கிறார் மங்கள சமரவீர- நல்லிணக்க செயல்முறைகள் குறித்து விளக்கமளிப்பார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதன்போது, நல்லிணக்கச் செயல்முறைகளின் முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை – முக்காற்பங்கு உறுப்பினர்களை காணவில்லை

துறை மேற்பார்வைக் குழுக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும், மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று நாடாளுமன்ற, குழுக்களின் அறையில் ஆரம்பமான நிலையில், இதில், 62 உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யோசிதவுக்கு ஆதரவளித்த சிறிலங்கா கடற்படையினர் நால்வர் இடைநிறுத்தம்

லெப்.யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டி அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணி வீரர்கள் நால்வரை சிறிலங்கா கடற்படை இடைநிறுத்தியுள்ளது.