மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

திருகோணமலையில் தளம் அமைக்க அமெரிக்கா திட்டம் – திஸ்ஸ விதாரண

திருகோணமலையில் தளம் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இருப்பதாக எச்சரித்துள்ளார், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

இந்தியாவுடனான உடன்பாட்டை எதிர்ப்பவர்கள் துரோகிகள் – என்கிறார் ரணில்

இந்தியாவுடன் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார தொழில்நுட்ப உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவினால் பிளவுபடும் நிலையில் கூட்டு எதிரணி

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில், பசில் ராஜபக்சவினால் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஞானசார தேரர் மீது பாய்ந்தது சாட்சிகள் பாதுகாப்பு சட்டம்

அண்மையில் உருவாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகிந்த கால கொலைகளுடன் தொடர்புடைய கப்டன் திஸ்ஸ யாழ். இராணுவ முகாமில் தடுத்து வைப்பு

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இடம்பெற்றிருந்த, போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான கப்டன் திஸ்ஸ என்று அழைக்கப்படும், கப்டன் எல்.எம்.ரி.விமலசேன யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ராஜித சேனாரத்னவின் உடல்நிலையில் முன்னேற்றம் – தொடர்ந்து சிங்கப்பூரில் சிகிச்சை

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுடன் வலுவான கூட்டை எதிர்பார்க்கிறதாம் சிறிலங்கா

ஏனைய நாடுகளுடன் பொருளாதார உடன்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும், சீனாவுடன் வலுவான கூட்டை சிறிலங்கா பேண வேண்டியுள்ளதாக சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட அம்பாந்தோட்டை செல்கிறார் ரணில்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஆய்வு செய்யும் பயணம் ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மேற்கொள்ளவுள்ளார்.

யோசிதவின் சிறைக்கூடப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளை தடுக்கும் கருவி

வெலிக்கடைச் சிறைச்சாலையில், யோசித ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே விடுதிப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளைத் தடுக்கும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.

கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய் ஆய்வில் இறங்குகிறது பிரெஞ்சு பல்தேசிய நிறுவனம்

சிறிலங்காவின் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட Total  என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளதாகவும், இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டதாகவும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.