மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இன்று பிரித்தானியா செல்கிறார் சிறிலங்கா அதிபர் – கமரூனிடம் உதவி கோருவார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார்.

ரம்புக்கணவில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ரம்புக்கண விகாரையில் தாதுகோபத்தை திறந்து வைக்கச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால், உரிய நேரத்தில் அதனைத் திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சிறிலங்காவுக்கு 3 பில்லியன் கடன் வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

சிறிலங்காவின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு, 3 பில்லியன் டொலர் கடன் வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளதாக, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சீனா- சிறிலங்கா இடையே வலுவான பாதுகாப்பு உறவுகள் நீடிப்பு

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவான நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகிறார் எசல வீரக்கோன்? – இந்தியாவுக்கான தூதுவராக சித்ராங்கனி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன்,  நியமிக்கப்படவுள்ளார்.

உகண்டா அதிபரின் பதவியேற்பு விழாவுக்குச் செல்கிறார் மகிந்த

உகண்டாவின் நீண்டகால ஆட்சியாளரான யொவேரி முசவேனியின், ஐந்தாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி

புதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் முற்றாக கையளிக்கப்படாது

அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றாகவே சீனாவிடம் கையளிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களை, சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை தலைவர் தம்மிக ரணதுங்க நிராகரித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வுக்குச் செல்கிறார் சந்திரிகா

நியூயோர்க்கில் எதிர்வரும், 10ஆம் ,11ஆம் நாள்களில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வில் சிறிலங்காவின் சார்பில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவுள்ளார்.

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஜெனிவா அமர்வில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 109ஆவது அமர்வில் அமர்வில், சிறிலங்கா தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.