மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் – அமைச்சரவை விவாதத்தை தவிர்த்தார் மைத்திரி

முன்னைய ஆட்சிக்காலத்தில் முக்கிய பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின், முன்னேற்றம் குறித்து, விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம், நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இயற்கையின் கோரத் தாண்டவம் – 73 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதி (ஒளிப்படங்கள்)

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால், இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளதுடன், 73 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 370,067 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கோத்தாவின் இராணுவப் பாதுகாப்பும் விலக்கப்படும்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

போர் வெற்றி விழா – மகிந்தவுக்கு அழைப்பு இல்லை

வரும் மே 18ஆம் நாள் நடைபெறவுள்ள, போர் வெற்றி நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவை ஒதுக்கி விட்டுச் சென்றாரா மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்காதது, அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – இந்தியாவுடன் வரும் 20ஆம் நாள் பேச்சு

சம்பூர் அனல் மின் திட்டத்தை, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றியமைப்பது தொடர்பாக, வரும் 20ஆம் நாள், இந்திய பங்காளர்களுடன், சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சின் குழுவொன்று பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா படைகளின் மே 18 போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு இல்லை

போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அவசரப்படமாட்டோம் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அவசரப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் காலை விருந்தில் சிறிலங்கா அதிபர்

பிரித்தானியாவில் நடைபெறும் ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இன்று காலை விருந்து அளித்தார்.

பசில் ராஜபக்ச கைது

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.