மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தன்னிச்சையான தடுத்து வைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சிறிலங்காவில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைப்புகள் குறித்த ஐ.நா பணிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிறிலங்காவில் மேற்கொண்ட 12 நாட்கள் பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான ஆறு காரணங்கள்

ஆறு காரணங்களாலேயே உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுவதாக பவ்ரல் அமைப்பின் பேச்சாளர் ரோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைகளுக்கு பொலித்தீன் பயன்படுத்த தடை

தேர்தல் பரப்புரை அலங்காரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குப் பணித்துள்ளார்.

சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தியுள்ளது.

மகிந்த அணியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் பல்வேறு உள்ளூராட்சி சபைகளுக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்குப் பின் மகிந்தவின் கட்சி அழிந்து விடும் – தயாசிறி ஜெயசேகர

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை நாமல் ராஜபக்சவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்ததாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தவின் கட்சி அழிந்து போய் விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவடையவுள்ளது. முதற்கட்டமாக, வேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இன்று நண்பரல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

7 முன்னாள் புலிகளுக்கு தலா 56 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ஏழு பேருக்கு அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றம், தலா 56 ஆண்டுகள் கரூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நெஸ்பி பிரபுவுக்கு இரகசியமாக நன்றிக் கடிதம் அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மார்ச்சுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றில் சட்டமா அதிபர் தெரிவிப்பு

எல்லை மீளமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர்- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும் என்று சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.