பெண் அதிபரை மண்டியிட வைத்த ஊவா முதலமைச்சர் கைது
பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்து மன்னிப்புக் கோரச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்து மன்னிப்புக் கோரச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள செங் சுவேயுவான் நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சீன- சிறிலங்கா நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகள், சீன தொழிற்துறை மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே சிங்கப்பூர் பிரதமர் இன்று கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஐதேகவினால் கையாளப்பட்டு வந்த தேசிய பொருளாதாரத்தை, தம்வசம் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள், தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களைத் தகுதியிழப்புச் செய்வதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மகரகம நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான நீதிபதி கே.ரி.சித்ரசிறி தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையின் 103 பக்கங்கள் காணாமல் போயிருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பான தனது இரண்டாவது கட்ட நடவடிக்கை (ஒப்பரேசன்-2) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.