மகிந்தவின் குடியுரிமையைப் பாதுகாக்க முயற்சி – மைத்திரியைச் சாடிய ரணில்
மகிந்த ராஜபக்சவை குடியுரிமை இழப்பில் இருந்து காப்பாற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை குடியுரிமை இழப்பில் இருந்து காப்பாற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இருந்து தேயிலை மற்றும் மிளகு ஆகியனவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் எச்சரித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இன்னும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை ஜப்பானுக்கு வழங்க சிறிலங்கா தயாராக இருக்கிறது என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
கொழும்பில் மூடப்பட்டிருந்த அமெரிக்க மையம் (American Center) நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.