மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கூட்டமைப்பு நாடாளுமன்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்காது

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் 6ஆம் நாள் நடைபெறவுள்ள, அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக தேசிய முன்னணியும் என்று அறிவித்துள்ளன.

லசந்த படுகொலை – சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குற்றப்  புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவி கருணாநாயக்க பதவி விலகாவிடின் நீக்குவதற்கு நடவடிக்கை

ரவி கருணாநாயக்கவின் உபதலைவர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க விலகாவிடின், அவரைப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதேகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் சிறிலங்கா வந்தார்

ஐந்து நாட்கள் பயணமாக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் தமது துணைவியுடன் சிறிலங்கா வந்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசரை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வரவேற்றார்.

ஊவா முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை விசாரணை

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை விசாரணைக்கு அழைத்துள்ளது.

ரவியிடம் இருந்து ஐதேக உதவித் தலைவர் பதவியைப் பறிக்க பரிந்துரை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து கீழ் இறக்கப்படவுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

காலி மாவட்டத்தில் உள்ள, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மகிந்தவின் குடியியல் உரிமைகளை முடிந்தால் பறிக்கட்டும் –சவால் விடுகிறார் பீரிஸ்

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளை, சிறிலங்கா அரசாங்கம் முடிந்தால் ரத்துச் செய்து பார்க்கட்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின்  தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.

மண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம்?- கைவிடப்பட்டது ஆனையிறவு

யாழ்ப்பாணத்தில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா துடுப்பாட்ட சபையின் தலைவரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.