மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஒரே மேடையில் ‘அரசியல் முக்கோணம்’

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும் நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்கவை விடுவித்தது அனைத்துலக காவல்துறை?

டுபாயில் அனைத்துலக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது முகநூல் பதிவு ஒன்றில் உதயங்க வீரதுங்கவே வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதிகளை திருப்திப்படுத்த முனைகிறார் மைத்திரி – கூட்டமைப்பு கண்டனம்

பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பணி இடைநிறுத்தும் செய்யும் உத்தரவை ரத்துச் செய்து, அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள உத்தரவிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

மகிந்தவின் குடியியல் உரிமைகளை குறிவைக்கும் ரணில் – சுதந்திரக் கட்சி, ஜேவிபி எதிர்ப்பு

மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81 ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும், முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் என்பன குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் – புதன் நள்ளிரவுடன் பரப்புரைகள் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை மறுநாள் (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் இருந்து ஒதுங்குகிறார் சம்பந்தன்

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.